/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வறட்சியால் ஊருக்குள் புள்ளி மான்கள் உலா பலியை தடுக்க நீர் தொட்டி வைக்க திட்டம்

ADDED : மே 04, 2024 04:56 AM
ராமநாதபுரம்: கோடை வெயிலின் தாக்கத்தால் ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் நீர்நிலைகளை தேடி புள்ளி மான்கள் வருவது அதிகரித்துள்ளன. அவற்றை பாதுகாக்க காட்டிற்குள் தண்ணீர் தொட்டி வைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, பரமக்குடி தெளிச்சாத்த நல்லுார், சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, தொண்டி, மண்டபம், உச்சிபுளி உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த கருவேல மரக்காடுகள் உள்ள பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் சுற்றித்திரிகின்றன.
இவை போதிய பாதுகாப்பற்ற நிலையில் வேட்டை நாய்கள் தாக்கியும், விபத்தில் சிக்கி பலியாகின்றன. கோடை காலம் என்பதால் காட்டுப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், புள்ளிமான்கள் அவ்வப்போது தாகம் தீர்ப்பதற்காக ஊருணிகள், கண்மாய்களை நாடி நெடுஞ்சாலை நோக்கி வருகின்றன.
வனத்துறையினர் கூறுகையில், புள்ளிமான்கள் பரவலாக அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது.
தண்ணீருக்காக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நீர்நிலைகளுக்கு வருகின்றன. வழிதவறி ஊருக்குள் வரும் போது விரட்டுவது, வேட்டையாடுவது சட்டப்படி குற்றம்.
வயல்வெளியில் மான்களால் பயிர் சேதத்திற்குரிய இழப்பீடு தரப்படுகிறது. அதிகளவில் புள்ளி மான்கள் உள்ள இடங்களை கண்டறிந்து அங்கு தண்ணீர் தொட்டிவைக்கப்படும் என்றனர்.