/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரை சாலையில் சீமை கருவேலம் வளர்ந்து விபத்து அபாயம்
/
கிழக்கு கடற்கரை சாலையில் சீமை கருவேலம் வளர்ந்து விபத்து அபாயம்
கிழக்கு கடற்கரை சாலையில் சீமை கருவேலம் வளர்ந்து விபத்து அபாயம்
கிழக்கு கடற்கரை சாலையில் சீமை கருவேலம் வளர்ந்து விபத்து அபாயம்
ADDED : ஏப் 12, 2024 04:36 AM

ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்கு கடற்கரை ரோட்டில் இரு புறமும் சீமைக்கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
கிழக்கு கடற்கரை ரோட்டில் தொண்டி முதல் தேவிபட்டினம் வரை ரோட்டின் இரு புறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் ரோட்டில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத வகையில் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனர்.
எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக ரோட்டோரத்தில் செல்லும் போது டூவீலர் ஓட்டுநர்கள் சீமைக்கருவேலம் முட்கள் குத்தி காயம் அடைகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் உள்ள சீமைக்கருவேல முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.