/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
/
தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூன் 29, 2024 05:53 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்குகிறது.
முதுகுளத்துார் பேரூராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட பஜார் தெருவில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பல ஆண்டுகளாக கழிவு நீர் கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் சுற்றிலும் ஆங்காங்கே தேங்குகிறது. ரோட்டோரங்களிலும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்குகிறது. அவ்வப்போது பெய்யும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது.
கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தெருக்களில் வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே தெருவில் கழிவு நீர் தேங்காமல் தடுக்கவும், கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.