/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் வரை மின்சார கம்பிகள் பொருத்தினர்
/
பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் வரை மின்சார கம்பிகள் பொருத்தினர்
பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் வரை மின்சார கம்பிகள் பொருத்தினர்
பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் வரை மின்சார கம்பிகள் பொருத்தினர்
ADDED : செப் 14, 2024 11:54 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் முதல் பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் வரை மின்சார கம்பிகள் பொருத்தும் பணியில் ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்து தற்போது பாலத்தில் துாக்கு பாலத்தை பொருத்தும் பணி நடக்கிறது. இந்நிலையில் புதிய பாலத்தின் திட்ட மதிப்பீட்டின் படி பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மின்கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகள் பொருத்தினர்.
இந்நிலையில் பாலத்தில் இருந்து 250 மீ.,ல் உள்ள பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் வரை நேற்று மின் கம்பங்கள் ஊன்றி மின்சார கம்பிகள் பொருத்தும் பணியில் ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போதைய புதிய பாலத்தில் டீசல் இன்ஜின் இயக்கப்பட உள்ள நிலையில் எதிர்காலத்தில் ராமேஸ்வரம் வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
தற்போது பாம்பன் பாலம் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் வரை மின்சார கம்பிகள் பொருத்தப்படுவதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.