/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டில் பணம் திருடிவிட்டு மிளகாய் பொடி துாவிய திருடர்கள்
/
வீட்டில் பணம் திருடிவிட்டு மிளகாய் பொடி துாவிய திருடர்கள்
வீட்டில் பணம் திருடிவிட்டு மிளகாய் பொடி துாவிய திருடர்கள்
வீட்டில் பணம் திருடிவிட்டு மிளகாய் பொடி துாவிய திருடர்கள்
ADDED : மார் 10, 2025 04:38 AM
உச்சிப்புளி: - உச்சிப்புளி ரயில்வே கேட் அருகே உள்ள வீட்டில் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடியவர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடியை துாவி சென்றுள்ளனர்.
உச்சிப்புளி ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 57, இவரது மனைவி நேற்று திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால், இவர் நேற்று முன் தினம் இரவு உச்சிப்புளியில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று தங்கி விட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைத்திருந்ததை கண்டு சதீஷ்குமார் உச்சிப்புளி போலீசில் புகார் செய்தார்.
வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்த கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் முன் வாசலில் உள்ள கதவை இரும்பு கம்பியால் உடைத்து வீட்டின் உள் அறையில் இருந்த பீரோவை உடைத்து பணம் ரூ.10 ஆயிரத்து திருடி சென்றுள்ளனர்.
சதீஷ்குமாரின் மனைவி திருமணத்திற்கு சென்றதால் அவர் நகைகள் அணிந்து சென்றதாலும், ஒரு சில நகைகள் அவரது மகள் வீட்டில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக நகைகள் மர்ம நபர்களிடம் இருந்து தப்பியது. பணத்தை திருடிய மர்ம நபர்கள் போலீஸ் மற்றும் மோப்ப நாயை திசை திருப்புவதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை வீசி சென்றுள்ளனர். உச்சப்புளி போலீசார் கைரேகை நிபுணர்கள் சதீஷ்குமார் வீட்டில் தடயங்களை சேகரித்து விசாரிக்கின்றனர்.