/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி கோயிலில் ராமநவமி விழவில் இன்று திருக்கல்யாணம்
/
பரமக்குடி கோயிலில் ராமநவமி விழவில் இன்று திருக்கல்யாணம்
பரமக்குடி கோயிலில் ராமநவமி விழவில் இன்று திருக்கல்யாணம்
பரமக்குடி கோயிலில் ராமநவமி விழவில் இன்று திருக்கல்யாணம்
ADDED : ஏப் 18, 2024 05:22 AM

பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் ராமநவமி விழா நடந்தது. இன்று (ஏப்.18) காலை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் ராமநவமி விழா ஏப்.9ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் அபிஷேகம், தீபாராதனைகள் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.
நேற்று முன்தினம் மாலை புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்பட்டு, பாயாசம் பிரசாதம் வழங்கப்பட்டது.
நேற்று காலை ராம ஜனனம் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. அப்போது ராமர், சீதை, லட்சுமணன், அனுமனுக்கு அபிஷேகம் நடந்தது.
பின்னர் வெள்ளிக்கவசத்தில் வில், அம்பு ஏந்தி ராமர் அருள்பாலித்தார். பக்தர்களுக்க நெல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இன்று காலை 10:30 மணிக்கு கோதண்டராமசாமி, சீதாபிராட்டி திருக்கல்யாணம் நடக்கிறது.