/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயம் ஸ்தானிகர் மீது வழக்கு
/
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயம் ஸ்தானிகர் மீது வழக்கு
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயம் ஸ்தானிகர் மீது வழக்கு
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயம் ஸ்தானிகர் மீது வழக்கு
ADDED : மார் 31, 2024 03:19 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் ரூ.ஒரு கோடி மதிப்புள்ள நகைகள் மாயமானதில் ஸ்தானிகர் சீனிவாசன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44 வது திவ்ய தேசம். ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு இக்கோயில் சொந்தமானது.
ஜெகநாதப் பெருமாளுக்கும், பத்மாசனித்தாயாருக்கும் மன்னர்களால் வழங்கப்பட்ட விலையுயர்ந்த தங்கம், வெள்ளி, முத்து, பவள ஆபரணங்கள் உள்ளன. இவை கோயில் பாதுகாப்பு பெட்டகத்திலும், ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள அறங்காவலர் பெட்டகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்பு பெட்டகங்களின் சாவி கோயில் பரம்பரை ஸ்தானிகரிடம் இருந்தது.
இந்த ஆபரணங்கள் குறித்து 2023 நவ., ல் திவான் பழனிவேல் பாண்டியன் ஆய்வு செய்த போது ஆவணங்களில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. 1,400 கிராம் தங்கம், 2249 கிராம் வெள்ளி நகைகள் இல்லை. அதன்படி 30 தங்க நகைகளையும், 16 வெள்ளி நகைகளையும் காணவில்லை. இதுகுறித்து திவான் கேட்ட போது ஸ்தானிகர் சீனிவாசன் நகைகளை திருப்பித்தர ஏதுவாக 2024 பிப்., வரை அவகாசம் வழங்கப்பட்டது. அவர் நகைகளை திருப்பி தராததால் திவான் பழனிவேல் பாண்டியன் மார்ச் 1ல் சீனிவாசனை சஸ்பெண்ட் செய்தார். பின் எஸ்.பி., சந்தீஸிடம் மார்ச் 6ல் புகார் அளித்தார்.
குற்றப்பிரிவு போலீசார் கோயிலில் பணிபுரிவோரிடம் விசாரித்தனர். சுவாமி நகைகள் மாயாமானது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது குற்றப்பிரிவு போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவில் வழக்குப்பதிந்தனர்.
போலீசார் கூறுகையில், 'நகைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போயுள்ளன.
இது குறித்து கோயில் நிர்வாகிகள், ஸ்தானிகர் உள்ளிட்டவர்களிடம் தொடர் விசாரணை நடக்கிறது,' என்றனர்.

