/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயம்: சுவாமிக்கு அணிவிக்க முடியாததால் பக்தர்கள் கவலை
/
திருப்புல்லாணி கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயம்: சுவாமிக்கு அணிவிக்க முடியாததால் பக்தர்கள் கவலை
திருப்புல்லாணி கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயம்: சுவாமிக்கு அணிவிக்க முடியாததால் பக்தர்கள் கவலை
திருப்புல்லாணி கோயிலில் ரூ.ஒரு கோடி நகைகள் மாயம்: சுவாமிக்கு அணிவிக்க முடியாததால் பக்தர்கள் கவலை
ADDED : மே 08, 2024 01:12 AM
ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ரூ.ஒரு கோடி மதிப்புள்ள நகைகள் மாயமான நிலையில் சுவாமி, அம்பாளுக்கு திருவிழாக்காலங்களில் ஆகமவிதிப்படி அணிவிக்க முடியாத நிலையிருப்பதாக பக்தர்கள் கவலை தெரிவித்தனர்.
ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில் சுவாமி, பத்மாசனித்தாயாருக்கு அணிவிப்படும் நகைகளில் 952 கிராம் எடையுள்ள 30 நகைகள், 1199 கிராம் எடையுள்ள 16 வெள்ளி நகைகள் மாயமாயின. அவற்றின் மதிப்பு ரூ. ஒரு கோடிக்கும் மேலிருக்கும்.
தற்போதைய திவான் பழனிவேல் பாண்டியன் புகாரின்படி குற்றப்பிரிவு போலீசார் கோயில் நகை பொறுப்பாளரான ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
பணியாளர்களிடம் விசாரணை
நகைகள் மாயமான காலத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் ராமு, பாண்டி, சாமித்துரையிடம் விசாரித்தனர். முன்னாள் திவான் மகேந்திரனிடம் இரு முறை விசாரணை நடத்தினர். ஸ்தானிகர் சீனிவாசன் நீதிமன்றத்தில் 2 முறை தாக்கல் செய்த முன் ஜாமின் மனுக்களை நீதிபதி குமரகுரு தள்ளுபடி செய்தார்.
ஓய்வு பணியாளரிடம் விசாரணை
கோயிலில் 1981 முதல் 30 ஆண்டுகளாக நகைகள் மற்றும் உண்டியல் பிரிவின் நிர்வாக பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கிருஷ்ண மூர்த்தியிடமும் விசாரிக்கப்பட்டது. ஸ்தானிகர் சீனிவாசன் தந்தை திருவேங்கடத்திடம் இருந்து பொறுப்பை ஏற்ற போது கிருஷ்ணமூர்த்தி உடன் பணிபுரிந்தார்.
கவலையில் பக்தர்கள்
நகைகள் மாயமான தினத்தில் இருந்து சுவாமி, அம்பாளுக்கு அணிவிக்கப்பட்ட நகைள் மட்டுமே தொடர்ந்து அணிவிக்கப்பட்டு உள்ளன. நகைப்பெட்டியின் சாவி ஸ்தானிகரிடம் உள்ளது.
இதனால் திருவிழாக் காலங்களில் சுவாமிக்கு ஆகம விதிகளின் படி நகைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடத்த முடியவில்லை என பக்தர்கள் கவலை தெரிவித்தனர்.
விசாரணையில் முன்னேற்றம் இல்லை
குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. விசாரணை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பக்தர்கள் வலியுறுத்தினர்.

