ADDED : ஜூன் 14, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய பொருட்கள் பொது ஏலம் விடப்பட்டது.
வெள்ளி கண்மலர் ரூ.9 லட்சத்து 24 ஆயிரத்து 500க்கும், உப்பு ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்திற்கும், முட்டை ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்திற்கும், பிரசாதம் ஸ்டால் ரூ.4 லட்சத்து 2000க்கும், வேப்பிலை ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.
ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சிரஸ்தார் சுப்பிரமணியன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சண்முகசுந்தரம், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட கிராமத்தினர் கலந்து கொண்டனர்.