
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை பிடாரி அம்மன் கோயில் திருவிழா ஏப்.29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் கோயிலில்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (மே 7) பூக்குழி இறங்குதலும், சுவாமி ஊர்வலமும் நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.