
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே கல்லுார் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது.
ஏராளமான பெண்கள் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.