ADDED : பிப் 28, 2025 06:59 AM
தொண்டி: தொண்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் ஷாஜகான்பானு தலைமையில் நடந்தது. துணைதலைவர் அழகுராணி, செயல் அலுவலர் திருப்பதி மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மின்சார சிக்கனத்திற்காக சோலார் பேனல் அமைப்பது, அலுவலகம் முன்பு தேசியக் கொடி ஏற்றும் வகையில் தளம் அமைப்பது, அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருக்களில் தெரு விளக்குகளை மாற்றி அமைப்பது, கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் தெளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பள்ளி விடும் நேரங்களில் அதிக வேகமாக செல்லும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும், தொண்டியிலிருந்து பெங்களூருவுக்கு அரசு போக்குவரத்து பஸ் இயக்க வலியுறுத்தியும், வட்டாணம், மணக்குடி டவுன் பஸ்சை தொண்டி வரை நீட்டிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் திருவெற்றியூருக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கவும், நிறுத்தபட்ட ஸ்ரீரங்கம் பஸ்சை மீண்டும் இயக்கவும், சென்னை பஸ்சை அடிக்கடி நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கவும், பஸ் டிப்போ அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றினர்.

