/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் வடக்குத் தெருவில் ரோட்டில் முட்புதர்: மக்கள் அவதி
/
ராமநாதபுரம் வடக்குத் தெருவில் ரோட்டில் முட்புதர்: மக்கள் அவதி
ராமநாதபுரம் வடக்குத் தெருவில் ரோட்டில் முட்புதர்: மக்கள் அவதி
ராமநாதபுரம் வடக்குத் தெருவில் ரோட்டில் முட்புதர்: மக்கள் அவதி
ADDED : மே 24, 2024 02:11 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி வடக்குத்தெரு பகுதியில் உள்ள காசி ராஜன் சந்து பகுதியில் ரோட்டில் சீமை கருவேலம் முள்புதராக மாறியுள்ளதுடன், மக்கள் குப்பை கொட்டும் தொட்டியாக மாற்றி வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சி 4-வது வார்டு வடக்கு தெருவில் உள்ள காசிராஜன் சந்து பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர். இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
முறையான பராமரிப்பின்றி சீமைக்கருவேல மரங்கள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளது.
இந்தப்பகுதி மக்கள் குப்பை கொட்டும் தொட்டியாக மாற்றியுள்ளனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் மூக்கைப்பிடித்துக் கொண்டே நடமாடும் நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் இந்த பகுதியை சீரமைத்து சுகாதாரம் காக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை உள்ளது.