ADDED : ஜூன் 27, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: ஏர்வாடி தர்கா சுற்றுவட்டார பகுதியில் ஆம்னி வேனில் வைத்து கஞ்சா விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஏர்வாடி அருகே காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் கமருதீன் 27, யாசர் அராபத் 29, ஏர்வாடி தெற்கு தெரு சமீம் மாலிக் 46, ஆகியோர் 650 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தனர். கஞ்சா விற்பதற்கு பயன்படுத்திய வேனையும், கஞ்சா பொட்டலங்களையும் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் கலாராணி, எஸ்.ஐ., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.

