/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டியில் மூன்று டாக்டர்கள் நியமனம்
/
தொண்டியில் மூன்று டாக்டர்கள் நியமனம்
ADDED : மார் 01, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி ஆரம்பசுகாதார நிலையத்தில் மூன்று டாக்டர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டதால் நோயாளிகள் நிம்மதியடைந்தனர்.
தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இரு டாக்டர் மட்டுமே பணியில் இருந்தனர். இதனால் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
கூடுதலாக டாக்டர்கள் நியமிக்கக் கோரி பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியும், அமைச்சரை சந்தித்தும் வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று மூன்று டாக்டர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். இதனால் நோயாளிகள் நிம்மதியடைந்தனர்.