/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூறாவளியால் கடலில் கவிழ்ந்தது படகு தத்தளித்த மூன்று மீனவர்கள் மீட்பு
/
சூறாவளியால் கடலில் கவிழ்ந்தது படகு தத்தளித்த மூன்று மீனவர்கள் மீட்பு
சூறாவளியால் கடலில் கவிழ்ந்தது படகு தத்தளித்த மூன்று மீனவர்கள் மீட்பு
சூறாவளியால் கடலில் கவிழ்ந்தது படகு தத்தளித்த மூன்று மீனவர்கள் மீட்பு
ADDED : ஆக 23, 2024 03:05 AM

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் சூறாவளி வீசியதால் படகு கவிழ்ந்தது. ஆறு மணி நேரத்திற்கு பிறகு மூன்று மீனவர்கள் பத்திரமாக மீட்கபட்டனர்.
தொண்டி அருகே நம்புதாளை படையாச்சிதெருவை சேர்ந்தவர்கள் மாணிக்கம் 57, திருவேலன் 48, குகன் 16. மூவரும் நேற்று முன்தினம் மாலையில் நாட்டுபடகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கரைக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் திரும்பாததால் சந்தேகமடைந்த மற்ற மீனவர்கள் அவர்களை தேடி படகில் சென்றனர்.
அப்போது படகு கவிழ்ந்த நிலையில் அதனை பிடித்தபடி மூன்று மீனவர்களும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள் அவர்களை மீட்டு, கவிழ்ந்த படகை கயிற்றால் கட்டி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கரைக்கு கொண்டு வந்தனர்.
மீனவர்கள் கூறியதாவது:
இரவு 10:00 மணிக்கு திடீரென்று பலத்த சூறாவளி வீசியதால் கடலில் படகு கவிழ்ந்தது. அந்த படகை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சி செய்தும் பலனில்லை. உயிருக்கு போராடிய எங்களை மற்ற மீனவர்கள் மீட்டனர் என்றனர். ஆறு மணி நேரமாக கடலில் தத்தளித்தபடி இருந்ததால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொண்டி ஆரம்பசுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.