/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை கடற்படையினர் தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் காயம்
/
இலங்கை கடற்படையினர் தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் காயம்
இலங்கை கடற்படையினர் தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் காயம்
இலங்கை கடற்படையினர் தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் காயம்
ADDED : ஏப் 10, 2024 06:29 AM

ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் பிளாஸ்டிக் குழாயால் சரமாரியாகத் தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 520 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் மீன்வளம் நிறைந்த இந்திய-இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர்.
அன்றிரவு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் தங்கள் பகுதி எனக்கூறி துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.
இதன்பின் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் மெக்கான்ஸ் 58,என்ற மீனவரின் படகு மீது கப்பலைக் கொண்டு மோதியதில் சேதமடைந்தது. பின் படகில் இறங்கிய இலங்கை வீரர்கள் அதில் இருந்த 6 மீனவர்களையும் பிளாஸ்டிக் குழாயால் சரமாரியாகத் தாக்கினர். இதில் மீனவர் மெக்கான்ஸ் காயமடைந்தார். மற்றொரு படகை துரத்திப் பிடித்த இலங்கை வீரர்கள் அதில் இருந்து 6 மீனவர்களையும் தாக்கினர். இதில் மீனவர் தங்கம் 55, இவரது மகன் நம்பீஸ்வரன் 32, காயமடைந்தனர்.
வலியால் கதறித் துடித்த மீனவர்களிடம் 'கச்சதீவுப் பகுதிக்கு மீன்பிடிக்க வரக் கூடாது. மீறினால் இதே கதி ஏற்படும்' என இலங்கை வீரர்கள் எச்சரித்து விரட்டினர். காயமடைந்த இரு படகில் இருந்த மீனவர்கள் 3 பேர் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ராமேஸ்வரம் கரை திரும்பினர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடுகளுக்கு சென்றனர்.

