ADDED : ஆக 03, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அக்ரஹாரம் தெருவில் சந்தேகத்திற்கிடமாக டிப்பர் லாரி நிறுத்தப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
தொண்டி எஸ்.ஐ., நாசர் மற்றும் போலீசார் சென்று ஆய்வு செய்தனர். லாரியை சோதனை செய்த போது 2 யூனிட் மணல் ஏற்றி வரப்பட்டது தெரிந்தது. அதனை தொடர்ந்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
