
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானையில் சிநேகவல்லி உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா மே 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 21ல் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் காலை தீர்த்தவாரி விழா நடந்து.
அன்று இரவு ஆயிர வைசிய மஞ்சப்புத்துார் மகாசபையினர் சார்பில் சப்தார்ண நிகழ்ச்சி நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் மலர், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடந்தது.