/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசநகரி அம்மனுக்கு திருவிளக்கு வழிபாடு
/
அரசநகரி அம்மனுக்கு திருவிளக்கு வழிபாடு
ADDED : ஜூலை 25, 2024 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே அரசநகரி கலைச்செல்வி அழகு முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு நடந்தது.
போகலுார் ஒன்றியம் மென்னந்தி நாகாச்சி கே.கருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசநகரி கிராமத்தில் 31ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா நடக்கிறது. ஜூலை 19ல் துவங்கி நடக்கும் விழாவில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது.
அப்போது ஏராளமான பெண்கள் விளக்கு ஏற்றி மலர்களால் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று அன்னதானம் நடந்தது. ஜூலை 26ல் பூச்சொரிதல் விழாவும், மறுநாள் பொங்கல் வைபவம் நடக்கிறது. கோயில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.