/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜூன் 5ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 இலவச மாதிரி தேர்வு
/
ஜூன் 5ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 இலவச மாதிரி தேர்வு
ஜூன் 5ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 இலவச மாதிரி தேர்வு
ஜூன் 5ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 இலவச மாதிரி தேர்வு
ADDED : ஜூன் 02, 2024 03:31 AM
ராமநாதபுரம்: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு ஜூன் 5ல் நடக்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மைய நுாலகர் இளங்கோ கூறியிருப்பதாவது:
அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு ஜூன் 9ல் நடக்கவுள்ளது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலகம், சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்., பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச மாதிரி தேர்வு ஜூன் 5ல் மாவட்ட மைய நுாலகத்தில் காலை 10:00 மணிக்கு நடக்கவுள்ளது.
இந்த தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
அலைபேசி எண்களான 94864 83723, 94423 21554, 99407 60347 எண்களில் தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம் என்றார்.