ADDED : மார் 10, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே உடைகுளம் கிராமத்தில் கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீஸ்க்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கமுதி தனிப்பிரிவு போலீசார் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கமுதி அருகே உடைகுளத்தில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்த போது 9.500 கிலோ புகையிலை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
கடையின் உரிமையாளர் வேல்முருகனை 36, கமுதி எஸ்.ஐ., கவுதம் கைது செய்தார்.