/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தக்காளி விலை வீழ்ச்சி 5 கிலோ வாங்கினால் வாளி இலவசம்
/
தக்காளி விலை வீழ்ச்சி 5 கிலோ வாங்கினால் வாளி இலவசம்
தக்காளி விலை வீழ்ச்சி 5 கிலோ வாங்கினால் வாளி இலவசம்
தக்காளி விலை வீழ்ச்சி 5 கிலோ வாங்கினால் வாளி இலவசம்
ADDED : மார் 04, 2025 06:29 AM
திருவாடானை: தக்காளி விலை வீழ்ச்சியடைந்தது. 5 கிலோ தக்காளி வாங்கினால் ஒரு பிளாஸ்டிக் வாளி இலவசம் என விற்பனையாளர்கள் கூவி விற்கின்றனர்.
திருவாடானை, தொண்டி பகுதியில் வெளிமாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் காய்கறிகளை வைத்து கூவி விற்பனை செய்வது வழக்கம்.
தற்போது தக்காளி கிலோ ரூ.10க்கு விற்பதால் மக்கள் ஆர்வமாக வாங்குகின்றனர். சில வியாபாரிகள் ௫ கிலோ தக்காளி வாங்கினால் ஒரு பிளாஸ்டிக் வாளி இலவசம் என்றும் கூவி விற்பனை செய்கின்றனர்.
கடந்த மாதம் தக்காளி கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யபட்டது.
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தக்காளி வாங்கி விற்பனை செய்கிறோம். தக்காளி சீசன் ஜன., மாத கடைசியில் துவங்கியது. விளைச்சல் அதிகரிப்பால் தேவையை மீறி மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்து விலை சரிவடைந்துள்ளது.
மக்களை கவரும் வகையில் பிளாஸ்டிக் வாளியை இலவசமாக கொடுத்து விற்கிறோம் என வியாபாரிகள் கூறினர்.