/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை கூட்டுறவு சங்க பணியாளர் நாள் நிகழ்ச்சி
/
நாளை கூட்டுறவு சங்க பணியாளர் நாள் நிகழ்ச்சி
ADDED : செப் 12, 2024 04:26 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நாளை (செப்.13ல்) கூட்டுறவு சங்க பணியாளர் நாள் நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கையின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர் கூட்டுறவு பணியாளர் நாள் குறித்து அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் தொடர்பாகவும், பணியின் போது அல்லது வேறு வகையில் ஏற்படும் குறைகளை பகிர்ந்திடவும், அக்குறைகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு தீர்க்கும் வகையில் செப்.13 காலை 10:30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கில் பணியாளர் நாள் நிகழ்வு நடக்கிறது.
இதில் ராமாநாதபுரம் மண்டல இணைப்பதிவாளர் ஜீனு தலைமை வகிக்கிறார். சங்க பணியாளர்கள் பணி தொடர்பாகவும் பணியின் போதும் அல்லது வேறு வகைகளில் ஏற்படும் குறைகள் தொடர்பாகவும் மனுக்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்களை ஆர்.சி.எஸ்., போர்டலில் பதிவேற்றம் செய்து தீர்வு காணப்படும், என்றார்.