ADDED : மே 07, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் காட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் 34. இவருக்கும் திருப்பாலைக்குடி காந்தி நகரை சேர்ந்த பெண்ணுக்கும் 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் தங்கராஜ் மனைவியின் அண்ணன் மனைவிக்கு நேற்று முன்தினம் திருப்பாலைக்குடியில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்த தங்கராஜ் அதிகளவு மது அருந்தியுள்ளார். அதிக மது போதையால் மதிய உணவு உட்கொள்ளாமலும் துாங்கி உள்ளார். மாலையில் உறவினர்கள் அவரை எழுப்ப முயன்ற போது அவர் துாக்கத்திலே இறந்தது தெரிய வந்தது. திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

