/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் வழிகாட்டி பலகையின்றி தவிக்கும் சுற்றுலா பயணிகள்
/
சாயல்குடியில் வழிகாட்டி பலகையின்றி தவிக்கும் சுற்றுலா பயணிகள்
சாயல்குடியில் வழிகாட்டி பலகையின்றி தவிக்கும் சுற்றுலா பயணிகள்
சாயல்குடியில் வழிகாட்டி பலகையின்றி தவிக்கும் சுற்றுலா பயணிகள்
ADDED : மே 23, 2024 02:53 AM
சாயல்குடி: ராமநாதபுரம், துாத்துக்குடி, திருச்செந்துார், கன்னியாகுமரி, மதுரை, முதுகுளத்துார், கமுதி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கு முக்கிய இணைப்பு வழி நகரமாக சாயல்குடி திகழ்கிறது.
சாயல்குடி மும்முனை சந்திப்பில் சம்பந்தப்பட்ட நகரங்களுக்கு செல்வதற்கான வழிகாட்டி போர்டு அமைக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் வெளியூரில் இருந்து வரக்கூடிய யாத்ரீகர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். யாத்திரீகர்கள் கூறியதாவது:
சாயல்குடியில் பிரதான நகரங்களுக்கு செல்லக்கூடிய வழித்தடங்களை விவரிக்கும் வகையில் வழிகாட்டி விபர பலகை அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால் வாகனங்களில் வருவோர் தடம் மாறிச் சென்று மீண்டும் அழைக்கழிப்புக்கு உள்ளாகி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஒன்றிணைந்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றனர்.