/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுற்றுலாப்பயணிகள் வேதனை *பாம்பன் பாலம் நுழைவில் இறைச்சிக் கழிவுகள் *துர்நாற்றம் வீசுவதால் நோய்த்தொற்று அபாயம்

ADDED : ஏப் 07, 2024 05:11 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் நுழைவுப்பகுதியில் திறந்தவெளியில் இறைச்சி கழிவுகளை கொட்டி குவத்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுலாப்பயணிகள் முகம் சுளிக்கின்றனர். தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
பாம்பன் கடலில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கும், தனுஷ்கோடிக்கும் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
பாலத்தில் சுகாதாரம் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லாமல் பராமரிப்பின்றி படுமோசமாக உள்ளது. பாம்பனில் உள்ள ஆடு, கோழி இறைச்சி விற்கும் வியாபாரிகள் மாமிசக் கழிவுகளை பாலத்தின் கிழக்கு நுழைவுப்பகுதியில் கொட்டி விடுகின்றனர்.
இறைச்சி கழிவுகள் மலைபோல் குவியும் நிலையில் அவற்றை பருந்துகள், காகங்கள் வட்டமடித்து துாக்கி செல்லும் போது பாலத்தில் செல்லும் வாகனங்கள் மீதும் சுற்றுலாப்பயணிகள் மீதும் கழிவுகள் விழுகிறது. மேலும் பாலத்தின் நுழைவுப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் மக்கள் அருவருப்புடன் பாலத்தை கடந்து செல்கின்றனர். பல கி.மீ., நடந்து ராமேஸ்வரம் தீவுக்கு யாத்திரை பயணம் வரும் பக்தர்களை மாமிச துர்நாற்றம் வரவேற்பதால் வேதனை அடைகின்றனர். இறைச்சி கழிவுகளின் துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே பாலத்தின் நுழைவுப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் இப்பகுதியில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
---