/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழ அரும்பூர் கிராமத்திற்கு டவுன் பஸ் இயக்கம்
/
கீழ அரும்பூர் கிராமத்திற்கு டவுன் பஸ் இயக்கம்
ADDED : ஏப் 08, 2024 05:27 AM
திருவாடானை : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கீழஅரும்பூருக்கு டவுன் பஸ் இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவாடானை- திருவெற்றியூர் ரோட்டில் இருந்து 2 கி.மீ.,ல் கீழஅரும்பூர் உள்ளது. திருவாடானையிலிருந்து காலை 8:00, மாலை 5:45 மணிக்கு இக்கிராமத்திற்கு செல்லும் வகையில் டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
ஐந்து நாட்களுக்கு மேலாகியும் பஸ் வராததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
வெளியூர்களிலிருந்து பொருட்களை வாங்கி வரும் பெண்கள் கீழஅரும்பூர் பஸ்ஸ்டாப்பிலிருந்து தலைச் சுமையாக நடந்தே சென்றனர்.
மாணவர்களும் அவதிப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக டவுன் பஸ் இயக்க போக்குவரத்துதுறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

