நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி; சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது.
பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணிமேகலை முன்னிலை வகித்தார்.
சாயல்குடி நகர் பகுதிகளில் சேதமடைந்த ரோடுகளில் புதிய ரோடுகள் அமைப்பதற்கு கருத்து பெறப்பட்டது. வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இளநிலை உதவியாளர் செல்ல மாரியப்பா நன்றி கூறினார்.