/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பலத்த காற்றில் முறிந்த மரக்கிளையால் போக்குவரத்து பாதிப்பு

ADDED : மே 24, 2024 02:23 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் வீசிய பலத்த காற்றில் மரக்கிளை முறிந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர்.
ராமநாதபுரத்தில் மேகமூட்டத்துடன் அவ்வப்போது லோசன சாரல் மழை மட்டும் பெய்து வருகிறது. இதில் தரை கூட நனையாத நிலையில் கோடை மழை ராமநாதபுரம் நகரில் கை கொடுக்கவில்லை. புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று வீசிய பலத்த காற்றில் மதுரை ரோட்டில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகில் ரோட்டோரம் மதியம் 2:30 மணிக்கு வாகை மரம் முறிந்து ரோட்டில் விழுந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் நிலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததால் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மரக்கிளைகளை அகற்றிய பின் 30 நிமிடத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.