/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் இன்று போக்குவரத்து மாற்றம்
/
பரமக்குடியில் இன்று போக்குவரத்து மாற்றம்
ADDED : செப் 10, 2024 11:58 PM
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று (செப்.11) இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளத்தையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் திருவாடானை, சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரை செல்லும்.
மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குடி வழியாக ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் பூவந்தி வழியாக சிவகங்கை, காளையார்கோவில், சருகனி, திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் வழியாக ராமநாதபுரம் செல்லும்.
வாலிநோக்கம், கமுதி மற்றும் முதுகுளத்துார் பகுதியில் இருந்து செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் சாயல்குடி வழியாக இ.சி.ஆர்., ரோடு செல்ல வேண்டும். இந்த வழித்தடத்தில் செல்பவர்கள் பரமக்குடி, பார்த்திபனுார் வழியாக செல்ல அனுமதி கிடையாது எனது மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.