/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் அனுமதியின்றி டிரைவிங் பயிற்சி பள்ளிகள் போக்குவரத்து துணை ஆணையர் நடவடிக்கை

ADDED : மே 05, 2024 05:45 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அனுமதி பெறாத கார், டூவீலர் பயிற்சி நிறுவனங்கள் அதிகளவில் செயல்படுவதாக விருதுநகர் போக்குவரத்து துணை ஆணையருக்கு புகார்கள் சென்றதையடுத்து நேற்று அவர் திடீர் சோதனை நடத்தி ஒரு காரை பறிமுதல் செய்தார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிலர் அனுமதி எதுவும் பெறாமல் டூவீலர் ஓட்டும் பயிற்சி பல ஆண்டுகளாக அளிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று கார்கள் வைத்து டிரைவிங் ஸ்கூல் பெயரில் கார் ஓட்டும் பயிற்சியும் அளிக்கின்றனர்.
கலெக்டர் அலுவலக வளாக ரோட்டில் பயிற்சி அளிப்பதால் அங்கீகாரம் பெற்றவர்கள் போல் காட்டிக்கொண்டு ஏராளமானோருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். முறையான பயிற்சி பெற்ற பயிற்றுனர்கள் இல்லாத நிலையில் விபத்தில் சிக்கினால் இழப்பீடு கூட பெற முடியாது.
மேலும் அங்கீகாரம் இல்லாத நிலையில் டபுள் பிரேக் உள்ளிட்டவற்றுடன் பயிற்சி வாகனம் போல் காரை மாற்றி அமைத்துள்ளனர். இதுகுறித்து முறையாக டிரைவிங் பயிற்சி பள்ளி நடத்துவோர் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து விருதுநகரில் உள்ள போக்குவரத்து துணை ஆணையர் ரவியிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் அவர் நேற்று ராமநாதபுரத்தில் திடீர் சோதனை நடத்தினார், அப்போது அனுமதியின்றி பயிற்சி அளித்ததால் ஒரு காரை பறிமுதல் செய்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.----