ADDED : ஜூலை 31, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவிலில் வேளாண் துறை சார்பில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் சமச்சீர் உரமிடுதல், உர பயன்பாடு அதிகரித்தல் குறித்து விவசாயிகளின் பயிற்சி முகாம் பனிதவயல் கிராமத்தில் நடந்தது.
மாவட்ட வேளாண் துறை இயக்குனர் (மத்திய திட்டம்) ராஜா தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் விஜயராகவன், உரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் நாகராஜன், நயினார்கோவில் வேளாண் உதவி இயக்குனர் பானுபிரகாஷ் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
