ADDED : ஆக 08, 2024 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண் விரிவாக்கம்மையத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜலட்சுமி தலைமை வகித்தார்.
விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, பழக்கன்றுகள் நடவு செய்தல், மண்புழு உரம் தயாரித்தல் போன்றவற்றில் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் விளக்கினர்.
உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம்உட்பட பலர் பங்கேற்றனர்.