/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு குறித்துப் பயிற்சி
/
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு குறித்துப் பயிற்சி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு குறித்துப் பயிற்சி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு குறித்துப் பயிற்சி
ADDED : ஜூலை 13, 2024 04:41 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேசிய திறனாய்வு தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்தல் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு, உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு (9 முதல் பிளஸ் 2 வரை) மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற வேண்டும் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதலில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் தலைமை வகித்தார்.
ஆசிரியர் பயிற்றுநர் மோகன் தேசிய திறனாய்வு தேர்வு வினாத்தாள், அதற்கு மாணவர்களை எவ்வாறு தயார்படுத்தல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.