/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு மாதிரி பள்ளி துாதுவர்களுக்கான பயிற்சி
/
இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு மாதிரி பள்ளி துாதுவர்களுக்கான பயிற்சி
இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு மாதிரி பள்ளி துாதுவர்களுக்கான பயிற்சி
இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு மாதிரி பள்ளி துாதுவர்களுக்கான பயிற்சி
ADDED : மே 03, 2024 05:08 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் செயல்படும் மாதிரிபள்ளியில்இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு மாதிரி பள்ளி துாதுவர்களுக்கான பயிற்சிஅளிக்கப்பட்டது.
முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமைவகித்தார். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜே.லியோன் வரவேற்றார். பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி, மாணவர்நலன் கல்விசாரா ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாதிரி பள்ளி முதல்வர் ரவி பள்ளியின் சிறப்புகள் பற்றி பேசினார். வட்டார ஆசிரியஒருங்கிணைப்பாளர்கள் கடலாடி கிருஷ்ணன், கமுதி கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தினர். நிறைவாக வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் திருப்புல்லாணி முருகவேல் நன்றிகூறினார்.
மாவட்டம் முழுவதும் தகுதி, திறமை, இனசுழற்சி அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை மாதிரி பள்ளியில் சேர்க்கும் பணியில் மாதிரி பள்ளிதுாதுவர்களாக வட்டார அளவில் மண்டபம் சித்திசாரா ஜஹான், கமுதி துர்கா, திருப்புல்லாணி வினோதினி, ராமநாதபுரம் லேகா ஸ்ரீ, ஆர்.எஸ்.மங்கலம் கற்பகவள்ளி, பரமக்குடி கோமளா, கடலாடி பிரியங்கா ஆகியோர் துாதுவர்களாக செயல்படவுள்ளனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி ஜே.லியோன், மாதிரி பள்ளி முதல்வர்ரவி ஆகியோர் செய்திருந்தனர்.--