/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு பயிற்சி
/
ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு பயிற்சி
ADDED : ஆக 06, 2024 04:47 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே முத்து விஜயபுரம் கிராமத்தில் வேளாண் துறை அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
வட்டார வேளாண் உதவி இயக்குனர் கேசவராமன் தலைமை வகித்தார். பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் முருகேசன் முன்னிலை வகித்தார். அவர் கூறியதாவது:
தொழு உரம் மண்ணுக்கு அவசியமானது. சீரற்ற முறையில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் நிலத்தின் இயல்பான தன்மை மாறுகிறது.
விவசாயிகள் தொழு உரத்தை ரசாயன உரத்தைக் கொண்டு ஊட்டமேற்றி பயன்படுத்துவதால் நிலத்திற்கு தொழு உரத்தின் பயன்களும் ரசாயன உரத்தின் பலன்களும் உடனடியாக கிடைக்கிறது என்றார்.
பின் தொழு உரம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானிய விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.