/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாழையில் நுாற்புழுக்கள் கட்டுப்படுத்த பயிற்சி
/
வாழையில் நுாற்புழுக்கள் கட்டுப்படுத்த பயிற்சி
ADDED : மே 25, 2024 05:50 AM
கமுதி, : கமுதி அருகே கோரப்பள்ளம் கிராமத்தில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவர்கள் சார்பில் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தில் பயிற்சி வகுப்பு நடந்தது. இறுதி ஆண்டு மாணவர்கள் வாழை மரத்தில் நோய்கள் தாக்கம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மாணவர் சிவபாலன் கூறியதாவது: வாழை மரத்தில் நோய்கள், நுாற்புழுக்களை கட்டுப்படுத்த மரத்தில் பாரிங், பிராலினேஜ் முறையை பயன்படுத்த வேண்டும். நோய்கள், நுாற்புழுக்கள் இல்லாத 1.5 முதல் 2 கிலோ எடையுள்ள வாள் உறிஞ்சிகளை தேர்ந்தெடுத்து பாதிக்கப்பட்ட வேர்கள், அழுகிய பகுதியை நறுக்க வேண்டும்
பின் கிழங்கின் மேல் பகுதியில் உள்ள தண்டு பகுதியை 20 செ.மீ., இருக்குமாறு தேர்ந்தெடுத்து தோல் சீவிய கன்றுகளை 4 பங்கு களிமண் மற்றும் 5 பங்கு நீர் கொண்ட சேற்று குழம்பில் நனைக்க வேண்டும்.
கிழங்கின் மீது கார்போப்யூரான் 3 ஜி குருணையை தெளிக்க வேண்டும். பின்பு ஒரு உறிஞ்சிக்கு 40 கிராம் கார்போ பியூரான் 3ஜி குருணை கொண்டு பிராலினேஜ் செய்ய வேண்டும். இம்முறையை பயன்படுத்தினால் வாழை மரத்தில் நோய்கள், நுாற்புழுக்களில் இருந்து கட்டுப்படுத்தலாம் என்றார். கோரப்பள்ளம் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பங்கேற்றனர்.

