/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அச்சமின்றி பயணிக்கலாம்: காவனுார்- பாண்டியூர் நான்கு வழிச்சாலை ரூ.60 கோடியில் அமைக்கும் பணி மும்முரம்
/
அச்சமின்றி பயணிக்கலாம்: காவனுார்- பாண்டியூர் நான்கு வழிச்சாலை ரூ.60 கோடியில் அமைக்கும் பணி மும்முரம்
அச்சமின்றி பயணிக்கலாம்: காவனுார்- பாண்டியூர் நான்கு வழிச்சாலை ரூ.60 கோடியில் அமைக்கும் பணி மும்முரம்
அச்சமின்றி பயணிக்கலாம்: காவனுார்- பாண்டியூர் நான்கு வழிச்சாலை ரூ.60 கோடியில் அமைக்கும் பணி மும்முரம்
ADDED : ஆக 08, 2024 04:31 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து நயினார்கோவில் செல்லும் ரோட்டில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை தவிர்க்கும் விதமாக காவனுாரில் துவங்கி பாண்டியூர் வரை ரூ.60 கோடியில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடப்பதால் இனி அச்சமின்றி பயணிக்கலாம். அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநில நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ராமநாதபுரம்- நயினார்கோவில் ரோட்டில் தினமும் ஏராளமான அரசு பஸ்கள், கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோடு குறுகியதாக உள்ளதால் இரவு நேரங்களில் வாகன விபத்துகள் நடக்கிறது. இதையடுத்து இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். புதிதாக பாலம் அமைக்க வேண்டும். நயினார்கோவில் வரை நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
இதனை ஏற்று மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.48 கோடியில் ராமேஸ்வரம் -ராமநாதபுரம கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு இடையர் வலசை அருகே நயினார்கோவில் ரோடு துவங்கும் இடத்திலிருந்து 2 கி.மீ.,க்கு அப்பால் புதிதாக ரோடு அமைத்தல், காவனுார், தொருவளூர் பகுதியில் இரண்டு ஆற்றுப்பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
மேலும் மாநில நெடுஞ்சாலைதுறை சார்பில் போக்குவரத்து நெரிசல், விபத்தை தவிர்க்கும் விதமாக காவனுார் துவங்கி பாண்டியூர் வரை 12 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி ரூ.60 கோடியில் நடக்கிறது.
இப்பணிகளை சென்னையில் இருந்து நெடுஞ்சாலைத்துறை தலைமை செயலாளர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதமாகவும், தரமாக மேற்கொள்ள ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில் காவனுார்- பாண்டியூர் நான்கு வழிச்சாலை பணிகளை 2024க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் குறைந்துவிடும். பாண்டியூர் - நயினார்கோவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றனர்.-