/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் வணிகர் சங்க தலைவருக்கு அஞ்சலி
/
பரமக்குடியில் வணிகர் சங்க தலைவருக்கு அஞ்சலி
ADDED : செப் 13, 2024 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: தமிழ்நாடு வணிகர் சங்க தலைவராக இருந்த வெள்ளையன் காலமான நிலையில் பரமக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் அஞ்சலி கூட்டம் நடந்தது.
பரமக்குடி வியாபாரிகள் சங்க தலைவர் போஸ் தலைமை வகித்தார். மாநில வணிகர் சங்க துணைத் தலைவர் மணிவண்ணன், மாவட்ட வியாபாரிகள் சங்க பொருளாளர் சாதிக்அலி முன்னிலை வகித்தனர்.
பரமக்குடி சங்க துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், லெனின் குமார், சுப்பையா, இணை செயலாளர்கள் மணவாளன், ஜெயம் அந்துவான், பொருளாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெள்ளையன் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.