/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு அஞ்சலி
/
வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு அஞ்சலி
ADDED : ஆக 20, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். தொண்டியில் ஹிந்து ஜனநாயக பேரவை சார்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிறுவன தலைவர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ரமேஷ், மாநில அமைப்புக்குழு தலைவர் பூமிநாதன், மீனவரணி மாவட்ட செயலாளர் ஆனந்த், ஹிந்து மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவர் இளையராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

