/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் தேசிய கொடியின் மூவர்ணம்
/
பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் தேசிய கொடியின் மூவர்ணம்
பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் தேசிய கொடியின் மூவர்ணம்
பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் தேசிய கொடியின் மூவர்ணம்
ADDED : செப் 17, 2024 12:15 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் தடுப்பு கம்பியில் தேசிய கொடியின் மூவர்ணம் பூசப்பட்டு பொலிவுடன் காணப்பட்டது.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிந்த நிலையில் தற்போது 650 டன் துாக்கு பாலத்தை பொருத்தும் பணி நடக்கிறது. இதனை செப்.19க்குள் திறந்து மூடி சோதனை நடத்த உள்ளனர். இதன் பின் புதிய பாலத்தில் பயணிகள் ரயில் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார்.
இந்நிலையில் புதிய பாலம் திறப்பு விழாவிற்காக துாக்கு பாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு கம்பியில் தேசியக் கொடியின் மூவர்ணம் பூசப்பட்டு ஜொலித்தது. இப்பணிகள் அனைத்தும் முடிந்ததும் அக்.10ல் பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து துவக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.