ADDED : ஆக 02, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
தொண்டி:
தொண்டி மகாசக்திபுரத்தை சேர்ந்த மீனவர்கள் சதீஷ், முனிஸ் ஆகியோர் நேற்று முன்தினம் நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.
மீன்களுக்காக வலையை விரித்து காத்திருந்தனர். நீண்ட நேரம் சென்று வலையை இழுத்த போது 10 கிலோ எடையுள்ள ஆமை சிக்கியிருந்தது. அந்த ஆமையை உயிருடன் மீட்டு கடலில் விட்டனர். மீனவர்கள் கூறுகையில், இந்த ஆமை சித்தாமை வகையை சேர்ந்தது. இனபெருக்கத்திற்காக கரையை நோக்கி வந்திருக்கலாம் என்றனர்.
