/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கஞ்சா கடத்திய இருவர் கைது; 5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்
/
கஞ்சா கடத்திய இருவர் கைது; 5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்
கஞ்சா கடத்திய இருவர் கைது; 5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்
கஞ்சா கடத்திய இருவர் கைது; 5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்
ADDED : மே 13, 2024 12:26 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் சடையன்வலசை தரவைக்காடு பகுதியில்கஞ்சா கடத்திய இருவரை கேணிக்கரை போலீசார்கைது செய்து 5 கிலோ கஞ்சா, காரை பறிமுதல் செய்தனர்.
கேணிக்கரை எஸ்.ஐ., தினேஷ்பாபு தலைமையில் போலீசார்சடையன்வலசை சுடுகாடு, தரவைக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தஇருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குபின் முரணானதகவல்களை தெரிவித்தனர். அவர்களை சோதனையிட்டதில் பிளாஸ்டிக் பையில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்கள்ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மங்களேஸ்வரன்மகன் சேதுபதி 24, அதே பகுதியை சேர்ந்த மங்களீஸ்வரன் மகன் நம்புமாரிமுத்து 28, என தெரிய வந்தது.
கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இரு அலைபேசிகள், காரின் ஆர்.சி.புத்தகம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துஇருவரையும் கைது செய்தனர்.