/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீடியோ வெளியிட்டு மிரட்டல் இருவர் கைது; ஒருவர் ஓட்டம்
/
வீடியோ வெளியிட்டு மிரட்டல் இருவர் கைது; ஒருவர் ஓட்டம்
வீடியோ வெளியிட்டு மிரட்டல் இருவர் கைது; ஒருவர் ஓட்டம்
வீடியோ வெளியிட்டு மிரட்டல் இருவர் கைது; ஒருவர் ஓட்டம்
ADDED : மே 07, 2024 10:22 PM

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், 19 வயது இளம்பெண். பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்துரு, 20, என்பவருடன் பழகி, அடிக்கடி நேரில் சந்தித்து பேசி வந்தனர்.
ஓராண்டுக்கு முன் ஆசை வார்த்தை கூறி, சந்துரு மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த தனுஷ், 20, சக்திநாதன், 20, ஆகியோர், அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தனர். அதை வீடியோ எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில் அப்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த ஆபாச வீடியோவை காட்டி பணம், நகை கேட்டு அப்பெண்ணை தொந்தரவு செய்தனர். அப்பெண் பணம் தர மறுக்கவே, வீடியோவை வலைதளங்களில் வெளியிட்டனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் செய்தார். அவரை மிரட்டிய இருவரையும் திருவாடானை மகளிர் போலீசார் கைது செய்தனர். சக்திநாதனை தேடுகின்றனர்.

