/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.4,000 லஞ்சம் வாங்கிய மின் அதிகாரிகள் இருவர் கைது
/
ரூ.4,000 லஞ்சம் வாங்கிய மின் அதிகாரிகள் இருவர் கைது
ரூ.4,000 லஞ்சம் வாங்கிய மின் அதிகாரிகள் இருவர் கைது
ரூ.4,000 லஞ்சம் வாங்கிய மின் அதிகாரிகள் இருவர் கைது
ADDED : ஆக 09, 2024 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் ராஜநாதன், 32, என்பவர் அய்யன்ராஜ் என்பவரிடம் நிலம் வாங்கி இருந்தார்.
அவ்விடத்திற்கு அய்யன்ராஜ் பெயரில் மின் இணைப்பு கேட்டு கடலாடி மின்வாரிய அலுவலகத்தில் ராஜநாதன் விண்ணப்பித்தார்.
உதவிப்பொறியாளர் கணேஷ்குமார், 36, வணிக ஆய்வாளர் முத்துவேல், 37, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் ராஜநாதன் அளித்த புகார் படி, கணேஷ்குமார், முத்துவேலை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.