ADDED : மார் 25, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : தங்கச்சிமடம் பகுதியில் டூவீலரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தங்கச்சிமடம் இன்ஸ்பெக்டர் ராஜா யாகப்பா பஸ்ஸ்டாப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது டூவீலரில் வந்த பாம்பன் பட்டாள தெரு அடைக்கலம் மகன் தினேஷ்குமார் 44, துாத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் ராஜாங்கம் மகன் அந்தோணி செலஸ்டினை 35, சோதனை செய்தனர்.
அப்போது டூவீலரில் 2 கிலோ 850 கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்து கஞ்சா, ரூ.8000 பணம், 2 அலைபேசிகள், டூவீலரை பறிமுதல் செய்து தங்கச்சிமடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

