/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதி டூவீலரில் சென்றவர் பலி
/
குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதி டூவீலரில் சென்றவர் பலி
குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதி டூவீலரில் சென்றவர் பலி
குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதி டூவீலரில் சென்றவர் பலி
ADDED : மே 05, 2024 05:43 AM
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ரோட்டில் குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதி டூ வீலரில் சென்ற இளைஞர் பார்த்திபன் பலியானார்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருங்குடியைச் சேர்ந்தவர் பார்த்திபன் 35. இவர் டூவீலரில் மிக்சர் வியாபாரம் செய்து வந்தார்.
மே 3ல் வழக்கமாக டூவீலரில் பார்த்திபன் வியாபாரத்திற்கு சென்று விட்டு இரவு ஊர் திரும்பினார்.
திருப்பாலைக்குடி ரோடு பால்குளம் அருகே ரோட்டில் மாடு குறுக்கே சென்றதால் டூவீலர் மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்த பார்த்திபன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று இறந்தார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.