/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர் ஓட்டும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு தேவை
/
டூவீலர் ஓட்டும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு தேவை
டூவீலர் ஓட்டும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு தேவை
டூவீலர் ஓட்டும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு தேவை
ADDED : செப் 13, 2024 04:57 AM
கீழக்கரை: கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விழிப்புணர்வு இன்றி டூவீலரில் செல்லும் போக்கு தொடர்கிறது.
சட்டப்படி 18 வயதிற்கு மேல் உரிய முறையில் லைசென்ஸ் பெற்று ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்ட வேண்டும்.பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் ஒரே டூவீலரில் மூன்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை அமர வைத்து பயணிக்கும் போக்கு அதிகரிக்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிக்கல் அருகே பள்ளி மாணவர்கள் ஓட்டிச் சென்ற டூவீலர்கள் மோதி விபத்து நேரிட்டதில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பள்ளி மற்றும் கல்லுாரிகளில் போக்குவரத்து விதிகள், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் வகுப்புகள் நடத்த வேண்டும். காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் டூவீலர்களில் பயணிக்கும் போக்கு தொடர்கிறது.
அதி வேகமாகவும், ஹாரன் ஒலி எழுப்பி செல்லும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பள்ளி மாணவர்களை கண்காணித்து அறிவுரை கூறவும், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.