/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி பெட்ரோல் பங்கில் பணம் டூவீலர் திருட்டு: 2 சிறுவர்கள் கைது
/
தொண்டி பெட்ரோல் பங்கில் பணம் டூவீலர் திருட்டு: 2 சிறுவர்கள் கைது
தொண்டி பெட்ரோல் பங்கில் பணம் டூவீலர் திருட்டு: 2 சிறுவர்கள் கைது
தொண்டி பெட்ரோல் பங்கில் பணம் டூவீலர் திருட்டு: 2 சிறுவர்கள் கைது
ADDED : ஜூன் 25, 2024 11:05 PM
தொண்டி : தொண்டி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே பெட்ரோல் பங்கில் ஜூன் 14 அதிகாலை 3:00 மணிக்கு டூவீலரில் இருவர் பெட்ரோல் போட சென்றனர். அப்போது டூவீலரை ஓட்டி வந்தவர் பெட்ரோலை நிரப்பிக் கொண்டிருந்த போது பின்னால் அமர்ந்திருந்தவர் பெட்ரோல் பங்க் உள்ளே சென்று பணப்பெட்டியில் ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றார்.
அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானதை வைத்து தொண்டி போலீசார் நான்கு பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தபட்ட தேவிபட்டினத்தை சேர்ந்த அம்ஜத்கான் 19, மற்றும் 16 வயது சிறுவன் நேற்று கைது செய்யபட்டனர்.
போலீசார் விசாரணையில் இவர்கள் புதுக்கோட்டை உட்பட பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு சென்று டூவீலர்கள் திருடியதும் தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.